பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு எற்படுத்தி முக கவசங்களை வழங்கிய பெரியாம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர்
" alt="" aria-hidden="true" />
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த பெரியாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் உள்ள நியாய விலை கடையில் தமிழக முதலமைச்சரின் கொரோனா வைரஸ் நிவாரணம் அறிவிப்பின்படி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு₹1000 மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சக்கரை ஆலை இயக்குனர் திரு.PP. ரவிசங்கர் மற்றும் பெரியாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.PL. ஜெயலட்சுமி சங்கர் மற்றும் கூட்டுறவு வங்கி தலைவர் திரு சந்திரன் மற்றும் கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு பொது மக்களுக்கு நிவாரண தொகையான ₹1000 மற்றும் உணவு பொருட்களை வழங்கினர். பின்பு பெரியாம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் PL. ஜெயலட்சுமி சங்கர் கொரோனா பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் மஞ்சள் கலந்த வேம்பு நீரில் தங்களது கைகளை கழுவிய பின் நிவாரண தொகை மற்றும் உணவு பொருட்களை வாங்கவேண்டும் எனவும் பொதுமக்கள் வெளியில் செல்லும்பொழுது கவசங்களை அணிந்துகொண்டு செல்லுமாறும் நியாய விலை கடை மற்றும் மளிகைப் பொருட்களை கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளி தூரத்தில் வரிசையாக நின்று பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்று பொதுமக்களுக்கு பெரியாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்
திரு.PL.ஜெயலட்சுமி சங்கர் அறிவுறுத்தினார். பின்பு பொதுமக்களுக்கு பெரியாம்பட்டி ஊராட்சி மன்றத்தின் சார்பாக முகக் கவசங்கள் வழங்கினார்.